ETV Bharat / international

இலங்கை பொதுதேர்தல் 2020: பகல் 2:30 மணிக்கு முதல் கட்ட முடிவு அறிவிப்பு!

இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றம் மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக இருமுறை தேர்தல் தள்ளிபோனது. இந்தத் தேர்தல் நேற்று (ஆக.5) நடந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது.

இலங்கை பொது தேர்தல் 2020, Sri Lanka parliamentary election
இலங்கை பொது தேர்தல் 2020
author img

By

Published : Aug 6, 2020, 1:42 PM IST

இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மொத்த வாக்காளர்கள் ஒரு கோடியே 60 லட்சம் ஆகும்.

மீதமுள்ள 29 பேர் கட்சிகளின் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள். நேற்று (ஆகஸ்ட் 5) நடந்த பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் குறைந்த அளவிலேயே மக்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக மகிந்த ராஜபக்ச குடும்பத்தினர் நால்வர் முக்கிய பதவிக்கு போட்டியிடுகின்றனர். இதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இவ்வேளையில் 2020 பொதுத் தேர்தலின் முதலாவது தேர்தல் முடிவை பிற்பகல் 2.30 மணியளவில் வௌியிட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும், தாமதமானால் பிற்பகல் 2.30க்கும் 3.00 மணிக்கும் இடையில் முதலாவது தேர்தல் முடிவை வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் 1977ஆம் ஆண்டிற்கு பின்னர் மூன்றாவது முறையாக குறைந்த வாக்கு பதிவினை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த பொது தேர்தல் சந்தித்துள்ளது. தேர்தலில் முழுமையாக 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் முன்னணி ஆட்சியை கைப்பற்ற தயாராக உள்ளது

இந்த வாக்குவீதம் 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் மூன்றாவது மிககுறைந்த வாக்களிப்பு வீதத்தை பதிவுசெய்த தேர்தலாக இது பார்க்கப்படுகின்றது. அதன் விவரங்கள்

  • 1977 ஆம் ஆண்டு 86.69 வீதம்
  • 1989 ஆம் ஆண்டு 63.60 வீதம்
  • 1994 ஆம் ஆண்டு 76.24 வீதம்
  • 2001ஆம் ஆண்டு 76.03 வீதம்
  • 2004ஆம் ஆண்டு 75.95 வீதம்
  • 2010ஆம் ஆண்டு 61.26 வீதம்
  • 2015ஆம் ஆண்டு 77.66 வீதம்

வாக்குகள் பதிவாகியிருந்தது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவான வாக்கு வீதங்கள்,

  • கொழும்பு மாவட்டம் – 72%
  • கம்பஹா மாவட்டம் - 69%
  • களுத்துறை மாவட்டம் – 71%
  • கண்டி மாவட்டம் – 71%
  • நுவரெலியா மாவட்டம் – 75%
  • மாத்தளை மாவட்டம் – 71%
  • காலி மாவட்டம் – 69%
  • மாத்தறை மாவட்டம் – 71%
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 73%
  • அநுராதபுரம் மாவட்டம் – 71%
  • பொலநறுவை மாவட்டம் – 71%
  • திருகோணமலை மாவட்டம் – 74%
  • மட்டக்களப்பு மாவட்டம் – 72%
  • திகாமடுல்ல மாவட்டம் – 72%
  • பதுளை மாவட்டம் – 74%
  • மொனராகலை மாவட்டம் – 74%
  • வன்னி மாவட்டம் – 73%
  • யாழ்ப்பாணம் மாவட்டம் – 69%
  • குருணாகல் மாவட்டம் – 69%
  • புத்தளம் மாவட்டம் – 63%
  • இரத்தினபுரி மாவட்டம் – 73%
  • கேகாலை மாவட்டம் – 71%

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.