கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த ஒரு மாதமாக உலக நாடுகள் தவித்துவருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
இருப்பினும் தென் கொரிய அரசு கரோனா தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. உலகளவில் அதிகவேக தீவிர பரிசோதனை மேற்கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை தென் கொரிய உலகிற்கு முன்மாதிரியாக திகழ்கிறது. கடந்த மூன்று மாதங்களாக கரோனாவுடன் போராடிவந்தாலும் தென் கொரியாவில் இதுவரை 10 ஆயிரத்து 591 பாதிப்புகளே பதிவாகியுள்ள நிலையில், 225 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்நாட்டில் அதிபர் பதிவிக்கான இடைத்தேர்தல் நேற்று (ஏப்ரல் 15) வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள சுமார் 4.4 கோடி வாக்காளர்கள் முகக் கவசங்களுடன் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி வாக்குப்பதிவு மையங்களில் தங்கள் வாக்குகளை முறையாக பதிவு செய்தனர். அந்நாட்டு அதிபராக மூன்-ஜே-இன் தற்போது பொறுப்பு வகித்துவருகிறார். அவரின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு மத்தியில் நிறைவடைகிறது.
இதையும் படிங்க: மத வழிபாட்டுக்கு லாக்டவுன் கூடாது; பாக். அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் மத குருமார்கள்