சீனாவின் ஹூபே மகாணத்தில் மையம் கொண்டுள்ள கோவிட்-19 (கொரோனை வைரஸ்) என்ற தொற்றுநோய் காரணமாக அந்நாட்டில் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்து 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அந்நாட்டையே கதிகலங்கச் செய்துள்ள இந்தக் கொடூர நோய், தற்போது அதன் அண்டை நாடான தென் கொரியாவிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், தென் கொரியாவில் இன்று மட்டும் 142 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதில், பெரும்பாலானோர் (96) சியோங்டோ நகரில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதன்மூலம், அந்நாட்டில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 349ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் கோவிட்-19 காரணமாக நேற்றும் இன்றும் இருவர் உயிரிழந்தனர். இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கொரோனா நிவாரணம்: இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும் சீனா