ETV Bharat / international

குணமடைந்தவர்களை மீண்டும் தாக்குமா கரோனா?... - கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை மீண்டும் தாக்குமா கரோனா

சியோல்: கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை மீண்டும் வைரஸ் தாக்குவதற்கான வாய்ப்பில்லை என்று தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SKorea
SKorea
author img

By

Published : Apr 30, 2020, 11:46 AM IST

கோவிட்-19 தொற்று கடந்தாண்டு இறுதியில் சீனாவில் கண்டறியப்பட்டது. தற்போது உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை இந்த வைரஸ் மீண்டும் தாக்குமா என்பது குறித்து இதுவரை எந்தவொரு உறுதியான ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தென் கொரியால் வைரஸ் தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிய நூற்றுக்கணக்கானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தென் கொரியாவின் மருத்துவக் குழுவின் தலைவர் மியோங்-டான் கூறுகையில், "இந்த மருத்துவ பரிசோதனை முடிவுகளில் சிறு குறைபாடு இருக்கலாம். ஏனென்றால் தென்கொரியாவில் பயன்படுத்தப்படும் பிசிஆர் பரிசோதனைக் கருவிகள் மிகக் குறைந்த அளவு வைரஸ் தொற்றைக் கண்டறிந்தாலும் அதைக் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது உயிரில்லாத வைரஸையும் ஆபத்து அளிக்கும் வைரஸையும் வேறுபடுத்திக் காட்டாது. விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்தபட்சம் ஒரு ஆண்டிற்கும் இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

உடலில் இருக்கும் உயிரற்ற வைரஸ்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் மீண்டும் உயிர்ப்பிக்கும் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை" என்றார்.

தென் கொரியாவில் இதுவரை 10,765 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்த 277 பேருக்கு மீண்டும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: போரைவிட கரோனாவில் அதிகம் - அமெரிக்காவின் துயர நிலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.