அமெரிக்க உளவு அமைப்பான என்.எஸ்.ஏ.வில் பணிபுரிந்த வந்த எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்கா பிற நாடுகளை ரகசியமாக நோட்டமிட்டு வருவது தொடர்பான ரகசிய ஆவணங்களை 2013ஆம் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, அவர் கைதாகும் அபாயத்தைத் தவிர்க்க அமெரிக்காவை விட்டுத் தப்பியோடிய ஸ்னோடன் தற்போது ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், இவர் ரஷயாவில் வசிப்பதற்கான அனுமதி காலம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியோடு முடிவடையவிருந்த நிலையில், அதனை நீட்டிக்குமாறு மார்ச் மாதம் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், ரஷ்யாவில் ஸ்னோடன் தங்குவதற்கான கால அவகாசம் ஜூலை 15ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக ஸ்னோடன் உள்ளிட்ட வெளிநாட்டவரின் அனுமதி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய உயர் அலுவல வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, ஸ்னோடனின் வழக்கறிஞர் அன்டோலி குசென்ரீனா பேசுகையில், "ஸ்னோடன் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்" என்றார்.
2014ஆம் ஆண்டு ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த ஸ்னோடனுக்கு அந்நாட்டில் மூன்று ஆண்டுகள் தங்க அனுமதி அளித்தது. இதையடுத்து, இந்த அனுமதி மேலும் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தலைமை செவிலியர் இறப்பிற்கு நிவாரணம் வழங்கிய முதலமைச்சர்