இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், இந்த தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை அனுப்பியும் பாதுகாப்பில் மெத்தனம் காட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், குண்டு வெடிப்பு குறித்து நாட்டு மக்களிடம் பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, “தாக்குதல் குறித்து உளவுத்துறை எந்த எச்சரிக்கையும் அளிக்கவில்லை. இனிவரும் வாரங்களில் காவல்துறை, பாதுகாப்புப் படை முழுமையாக மறு சீரமைக்கப்படும். இன்னும் 24 மணி நேரத்தில் முப்படை தளபதிகளும் மாற்றப்படுவார்கள்” என்றார்.