இலங்கையில் நேற்று முன்தினம் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட எட்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயருமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இதற்கிடையே நேற்று காலை கொழும்பு விமான நிலையம் அருகே ஒன்பதாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் இலங்கை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மேலும், பொது இடங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அவசர நிலையும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை நாடாளுமன்றம் இன்று அவசரமாகக் கூடுகிறது.