பாகிஸ்தானின் கராச்சியில் மஸ்கன் சௌராங்கி அருகே குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இரண்டு மாடி கட்டடத்தில் நிகழ்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. சிலிண்டர் குண்டு வெடிப்பாக இருக்கலாம் என்று முபினா நகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகிலிருந்த கட்டடங்களின் கண்ணாடிகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.