கோவிட் - 19 தொற்று வகை முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வூஹான் மாகாணத்தில், தற்போது மற்றொரு வைரஸ் தொற்றுப் பரவல் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நியோ-கோவிட் (NeoCov) என்றழைக்கப்படும் இந்த தொற்று வேகமாகப் பரவும் என்றும்; இதன் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்றும் வூஹான் பல்கலைக்கழகம் அபாய ஒலி எழுப்பியுள்ளது. மேலும், இதுவரைப் பயன்பாட்டில் இருக்கும் எந்தவொரு தடுப்பூசிகளும் இதிலிருந்து விடுபட பயன்தராது எனவும் கூறியுள்ளது.
புதிய வைரஸ் இல்லை
வூஹான் பல்கலைக்கழகமும், சீன அறிவியல் அகாதமியின் பயோ-இயற்பியல் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில், நியோ-கோவிட் புதியது இல்லை எனவும்; இது மத்திய கிழக்காசியாவில் மெர்ஸ்-கோவிட் தொற்றுடன் தொடர்புடையது எனவும் கண்டறிந்துள்ளது. சுவாசக்குழாயில் பிரச்னை ஏற்படுத்தும் இந்த மெர்ஸ்-கோவிட் 2012 முதல் 2015 வரை அதிமாகப் பரவியது.
தென்னாப்பிரிக்காவில் வௌவால்களிடம் முதலில் கண்டறியப்பட்ட இந்த தொற்று இதுவரை மனிதர்களிடம் கண்டறியப்படவில்லை. இருப்பினும், இது மனிதர்களிடம் பரவும் வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.
அதிக அபாயம்
மெர்ஸ்-கோவிட் தொற்று உடன் தொடர்புடைய நியோ-கோவிட் அதிக அபாயம் என்றால், அதன் இறப்பு விகிதம் 35 விழுக்காடாக உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு வல்லுநர்கள் இடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய கோவிட்-19 தொற்று முதலில் வௌவால்களிடம் தான் கண்டறியப்பட்டது. ஆனால், அது மனிதர்களிடம் எப்படி பரவியது என்பதற்குத் தற்போது வரை எந்த உறுதியான தகவலும் இல்லை.
வௌவால்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி, அதன் பரவல் வேகமெடுத்தது என ஒரு தரப்பும், பரிசோதனைக் கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து மனிதர்களிடம் பரவியது என்று மற்றொரு தரப்பும் தெரிவிக்கிறது. ஆனால், உலக சுகாதார அமைப்பு (WHO) இரண்டாவது தரப்பு தகவலை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. புதிய வகை வைரஸ் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!