ETV Bharat / international

"மருத்துவ பரிசோதனைகளை ரஷ்யா முறையாக முடித்திருக்க வாய்ப்பில்லை" - புதின்

மாஸ்கோ: கரோனா தொற்றுக்கு ஸ்புட்னிக் V என்ற தடுப்புமருந்து கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த தடுப்புமருந்தின் நம்பகத்தன்மை குறித்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த ஆராய்சியாளர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sputnik V
Sputnik V
author img

By

Published : Aug 13, 2020, 9:29 AM IST

உலகை ஆட்டிப்படைத்துவரும் கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிகளில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டிபிடித்த கரோனா தடுப்பு மருந்து மூன்றாம்கட்ட சோதனையில் தற்போது உள்ளது.

ஸ்புட்னிக் V - ராஷ்யாவின் தடுப்புமருந்து

இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், ஸ்புட்னிக் V என்ற கரோனா தடுப்பு மருந்தை தான் கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா சில நாள்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது. மேலும், ரஷ்யா அதிபர் புதினின் மகளுக்கு இந்த கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில், அக்டோபர் முதல் வாரத்தில் கரோனா தடுப்பு மருந்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கப்படும் என்றும் ரஷ்யா அறிவித்திருந்தது.

ரஷ்யாவின் இந்த கரோனா தடுப்பு மருந்து செய்தி பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தாலும், ஸ்புட்னிக் V நம்பகத்தன்மை குறித்து அறிவியல் உலகில் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

கேள்வி எழுப்பும் வல்லுநர்கள்

இது குறித்து இந்தியாவைச் சேர்ந்த நோயெதிர்ப்பு மருந்து வல்லுநர் வினீதா பால் கூறுகையில், "இந்த தடுப்புமருந்து மனிதர்கள் மீது முறையாக சோதிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க போதுமான தரவுகள் வெளியிடாதவரை இதை நம்ப முடியாது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தடுப்பு மருந்து சோதனை நடைபெற்றதாக ரஷ்யா கூறுவதை நம்பமுடியவில்லை" என்றார்.

மூன்று கட்ட பரிசோதனைகள்

பொதுவாக தடுப்புமருந்து சோதனை மூன்று கட்டங்களாக மனிதர்கள் மீது நடத்தப்படும். முதல்கட்ட சோதனையில் 10க்கும் குறைவான மனிதர்கள் மீது இந்தத் தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படும். இந்தத் தடுப்பு மருந்து மனிதர்களின் உடலுக்கு பாதுகாப்பானதுதான் என்பது இதில் உறுதி செய்யப்படும்.

இரண்டாம்கட்ட சோதனையில் சில நூறு பேர்களுக்கு தடுப்புமருந்து வழங்கப்படும். இதில் தடுப்புமருந்தின் செயல்திறன் மதிப்பிடப்படும் மூன்றாம்கட்ட சோதனையில் சில ஆயிரம் தன்னார்வல்கள் மீது தடுப்புமருந்து செலுத்தப்படும். இதில் தடுப்பு மருந்து பெரும்பாலான மக்கள்தொகையின் மீது எவ்வாறு செயல்படுகிறது என்பதும் தடுப்புமருந்தின் செயல்திறன் எவ்வளவு மாதங்களுக்கு நீடிக்கிறது என்பதும் மதிப்பிடப்படும்.

'இவ்வளவு குறைந்த காலத்தில் பரிசோதனைகளை முடிக்க வாய்ப்பில்லை'

ரஷ்யாவின் தடுப்புமருந்து குறித்து உலக சுகாதார அமைப்பின் கிருமியல் வல்லுநர் உபாசனா ரே கூறுகையில், "அவர்கள்(ரஷ்யா) ஜூன் முதல் வாரத்தில்தான் முதல்கட்ட மருத்துவ சோதனைகளை தொடங்கினார்கள். இந்நிலையில், ஆகஸ்டு மத்தியில் தடுப்புமருந்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்த குறைந்த காலகட்டத்தில் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை அவர்கள் எவ்வாறு முடித்திருப்பார்கள்? இரண்டாம்கட்ட சோதனையில் மருந்தின் செயல்திறனை அவர்கள் உறுதி செய்திருக்கலாம். தடுப்புமருந்து வெளியாகும்போது, அத்துடன் இணைந்து மூன்றாம்கட்ட மருத்துவ சோதனையை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்.

ஆனால், மூன்றாம்கட்ட சோதனையில்தான் கிட்டத்ட்ட 50 விழுக்காடு தடுப்புமருந்துகள் தோல்வியடையும் என்பதையும் நாம் மறக்ககூடாது. தடுப்புமருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அது அனைத்து வகையான கரோனா வைரசுக்கு எதிராகவும் செயல்படுமா என பல கேள்விகள் உள்ளன" என்றார்.

உலகெங்கும் தற்போதுவரை இரண்டு கோடியே 8 லட்சத்து நான்காயிரத்து 205 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 லட்சத்து 47 ஆயிரத்து 214 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: இரண்டு வாரங்களில் கோவிட் -19 தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வரும் - ரஷ்யா அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.