சவுதிக்கும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது. ஏமன் நாட்டு அதிபர் மன்சூர்ஹாதி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் சவுதி அரேபியா உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனைக் கண்டிக்கும் வகையில் ட்ரோன்கள் மூலம் கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமன் தலைநகரான சனாவில் இருந்து தாக்குதல் நடத்திய நிலையில், சில ட்ரோன்களை சவுதி தலைமையிலான அரபு கூட்டணி படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப் பூர்வமான அறிவிப்புகள் எதையும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தெரிவிக்கவில்லை.