ETV Bharat / international

இந்திய மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் சாம்சங் - சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர்

நாமக்கல்: இந்தியாவில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சிகளை யுனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று சாம்சங் நிறுவனத்தின்சிஇஓ பீட்டர் ரீ தெரிவித்தார்.

பீட்டர் ரீ
author img

By

Published : May 18, 2019, 12:55 PM IST

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம் இந்திய அரசு, இந்திய தனியார் கல்வி நிறுவனங்களோடு இணைந்து திறன் மேம்பாட்டு பள்ளிகளை நிறுவிவருகிறது. இதன் ஒரு அங்கமாக, நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக, பரமத்தியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சாம்சங் நிறுவனத்தின் சார்பில், தொழில்நுட்ப பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனை தென்கொரிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, துணைத்தலைவர் தீபக் பரத்வாஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, 'தற்போது உலக அளவில் 4ஆம் தலைமுறை தொழில் புரட்சி ஏற்பட்டு வருகிறது. வருகின்ற 2020 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் visual display, வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ

இந்தியாவில் உள்ள கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் சாம்சங் நிறுவனம் திறன் மேம்பாட்டு பள்ளிகளை, இந்தியாவில் அமைத்து வருகிறது. 28 பள்ளிகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களோடு இணைந்து சாம்சங் நிறுவனம் மூலம் 683 smart class அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி G. பெரியசாமி, கல்லூரி முதல்வர்கள் மாணவ-மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

தீ.பரத்குமார்
நாமக்கல்

மே 17

இந்தியாவில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சிகளை ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து சாம்சங் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று தென்கொரிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சாம்சங் நிறுவனம் இந்திய அரசு மற்றும் இந்திய தனியார் கல்வி நிறுவனங்களோடு இணைந்து திறன் மேம்பாட்டு பள்ளிகளை நிறுவி வருகிறது. இந்தியாவில் இதுவரை, தமிழகத்தில் 4 பள்ளிகள் உட்பட 28 பள்ளிகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாக,
நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக, பரமத்தியில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் சாம்சங் நிறுவனத்தின் சார்பில்,  தொழில்நுட்ப பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது.

 இதனை தென்கொரிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ மற்றும் துணைத்தலைவர் தீபக் பரத்வாஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய சாம்சங் நிறுவனத்தின் துணை மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ, தற்போது உலக அளவில் 4-ஆம் தலைமுறை தொழில் புரட்சிஏற்பட்டு வருகிறது. 18-ஆம் நூற்றாண்டில் நீராவி அடிப்படையிலான எந்திர தொழில்நுட்பம்,  19-ஆம் நூற்றாண்டில்  மின் சக்தி அடிப்படையிலான தொழில்நுட்பம், 20-ஆம் நூற்றாண்டில் கணினி- இணையதள சேவை தொழில்நுட்பங்களும்,  தற்போது 21-ஆம் நூற்றாண்டில்,  artificial Intelligence-Information தொழில்நுட்பமும் உலகம் சந்தித்து வருகிறது. இதில், திறன் பயிற்சிகளை பெற்ற பணியாளர்களை பயன்படுத்துவது இன்றியமையாத தேவையாக உள்ளது. 

உலக அளவில் 96% திறன் மேம்பாடு, தென்கொரியா  பெற்றுள்ளது. இந்தியா 4.70 % மட்டுமே திறன் மேம்பாட்டை கொண்டுள்ளது.  தொழில் வளர்ச்சி இடத்தில் உலக அளவில் 91-ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் இணைந்து தென்கொரியா திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருவதால் இந்தியாவின் திறன் சதவீதம் அதிகரிக்கும்.

வருகின்ற 2020 ஆம் ஆண்டில் சாம்சங் நிறுவனம் visual display, வீட்டு உபயோக பொருட்கள், மொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் கூடுதல் கவனம் செலுத்தி, புதிய படைப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்தியாவில் உள்ள கிராமப்புற இளைஞர்கள், இளம் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் சாம்சங் நிறுவனம் திறன் மேம்பாட்டு பள்ளிகளை, இந்தியாவில் அமைத்து வருகிறது. இதன்மூலம் 6 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவில் இது போன்று 28 பள்ளிகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களோடு இணைந்து இந்நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது.

அரசு பள்ளிகளில், மாணவர்கள் கல்வி கற்றலை மேம்படுத்த, சாம்சங் நிறுவனம் மூலம் 683 smart classகள் அமைக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவில் நடுநிலைப் பள்ளிகள் அளவில் மாணவர்களிடம் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது என்றும் இந்த விழாவில் சாம்சங் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பீட்டர் ரீ பேசினார். மேலும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ரக மாடல் போனை மாணவர்களிடம் காண்பித்தார். இந்த போன் அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனி G. பெரியசாமி, கல்லூரி முதல்வர்கள் மாணவ-மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

SCRIPT IN MAIL
VISUAL IN FTP

FILE NAME : TN_NMK_03_17_SAMSUNG_CEO_VIS_7205944

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.