இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி ரஷ்யாவிடம் சரணடைந்த நாளான மே 9ஆம் தேதி, ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் வெற்றி தினமாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், நேற்று 75ஆம் ஆண்டு வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், கரோன பெருந்தொற்றை ரஷ்யா எதிர்கொண்டுவரும் சூழலில், ராணுவ அணிவகுப்புகளின்றி வெறும் போர் விமான மரியாதையுடன் மட்டும் வெற்றி தினம் எளிமையாக அனுசரிக்கப்பட்டது.
இதனை மேற்பார்வையிட்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், போரில் வீர மரணமடைந்த சோவியத் யூனியன் வீரர்களின் கல்லறையில் பூங்கொத்துடன் மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்.
வெற்றி தினத்தையொட்டி நடக்கவிருந்த ரெட் ஸ்குயர், இம்மார்டல் ரெஜிமன் ராணுவ அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இதுவரை இரண்டு லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : மலேசியாவில் தவித்த 177 தமிழர்கள் சிறப்பு விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தனர்