காபூல் (ஆப்கானிஸ்தான்): காபூலில் ஹமீது கர்சாய் பன்னாட்டு விமான நிலையம் அருகே ராக்கெட் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள், மனித இழப்புகள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காபூல் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 24 முதல் 36 மணிநேரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக எச்சரித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன் காபூல் விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலை ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பத்திரிகையாளர்கள் உள்பட ஆப்கானிஸ்தானியர்கள் 169 பேரும், அமெரிக்க படையைச் சேர்ந்த 13 பேரும் உயிரிழந்தனர்.