சீனாவின் லியாங் நகரிலுள்ள யுவான்ஜியாங்சன் நிலக்கரிச் சுரங்கத்தில் நவ.29ஆம் தேதி காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த 13 தொழிலாளிகள் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கினர்.
இந்நிலையில் அவர்களை மீட்கும் பணியில் 860க்கும் மேற்பட்டவர்களுடன் கூடிய 11 மீட்பு குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால் கடுமையான நிலப்பரப்பு காரணமாக மீட்பு பணிகள் தடைப்பட்டுள்ளது. இருப்பினும் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருவதாக மீட்புக் குழு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று காலை முதல் சுரங்கத்திலிருந்த வெள்ள நீரின் அளவு குறைந்து வருவதாகவும், மேலும் நீரை வெளியேற்றுவதற்காக இயங்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரசியலில் நுழைந்தார் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பிரதமரின் இளைய மகள்