இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்தன் 75ஆம் ஆண்டு நினைவுதினம் ரஷ்யாவில் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் மே 9ஆம் தேதி உலகப்போர் வெற்றி தின அனுசரிப்பை ரஷ்யா வழக்கமாக மேற்கொள்ளும். இந்தாண்டு 75ஆம் ஆண்டு நினைவுதினம் என்பதையெட்டு மே 9ஆம் தேதி நடைபெறவிருந்த வெற்றி விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்புவிடுத்திருந்தார்.
ஆனால், கோவிட் - 19 வைரசின் எதிர்பாராத தாக்குதல் காரணமாக அனைத்துத் திட்டங்களும் மாறின. வழக்கத்திற்கு மாறாக ஜூன் 24ஆம் தேதியான இன்று வெற்றிவிழா அணிவகுப்பு நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 75 வீரர்கள் இந்த வெற்றி விழாவில் பங்கேற்று கண்கவர் அணிவகுப்பை மேற்கொண்டனர். ரஷ்யாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிவப்பு சதுக்கத்தில் இந்த அனிவகுப்பு நடைபெற்றது. இந்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார்.
இதையும் படிங்க: நினைவுச் சின்னங்களை உடைத்தால் சிறை நிச்சயம் - ட்ரம்ப்