தென்மேற்கு ஜப்பானில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, ககோஷிமா, மியாஸாகி ஆகிய இடங்களில் 1000 மில்லிமிட்டர் அளவுக்குக் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த மழைப் பொழிவு, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இரண்டு மடங்கு அதிகமாகும்.
இதன் விளைவாக, இந்த இரண்டு பகுதிகளில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டது. இத்தகைய சூழலில், நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலச்சரிவு தொடர்ந்து ஏற்படும் என்பதால், அப்பகுதியிலுள்ள மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அரசு அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.