ETV Bharat / international

ஹாங்காங் நாடு கடத்தும் சட்டம்: பேரவையை சூறையாடிய போராட்டக்காரர்கள்!

ஹாங்காங்: சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் சட்டப்பேரவைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.

hk
author img

By

Published : Jul 2, 2019, 8:13 AM IST

பிரிட்டனின் காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங், 1997ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த தினத்தையொட்டி அப்பிராந்திய அரசு சார்பாக நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஹாங்காங்கின் தனித்தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தியும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹாங்காங் காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இருப்பினும், காவல்துறையின் தடுப்பை மீறி ஹாங்காங் சட்டப்பேரவை கட்டடத்தை முற்றுகையிட்டு, இரும்பு கம்பிகளால் அக்கட்டடத்தின் கண்ணாடி சுவர்களை உடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த பொருட்களை சூறையாடிய போராட்டக்காரர்கள், சுவர்களில் மத்திய சீன அரசுக்கு எதிரான வாசகங்களை எழுதினர். பின்னர், அரசின் எச்சரிக்கையை அடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஹாங்காங் வீதிகளில் நடந்த போராட்டம்
ஹாங்காங் வீதிகளில் நடந்த போராட்டம்

கைதிகள் பரிமாற்ற மசோதா:

ஹாங்காங்கில் உள்ள கைதிகளை சீனா, தாய்லாந்துக்கு நாடுகடத்தும் ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு எதிராக அங்கு பெரும் போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக, மசோதாவைத் தற்காலிகமாக தள்ளுபடி செய்தது ஹாங்காங் அரசு. எனினும், அதனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என ஹாங்காங் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஹாங்காங் சட்டப்பேரவையை போராட்டக்காரர்கள் சூரையாடும் காட்சி

Intro:Body:

hk

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.