பஷ்டூன் பாதுகாப்பு இயக்கத்தின் (பி.டி.எம்) தலைவர் 27 வயதான பஷ்டீன். பாகிஸ்தானிலுள்ள பஷ்டூன் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த இவர் பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்றினைத்து ஆயிரக்கணக்கான பேரணிகளை நடத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் எல்லையில் இஸ்லாமிய போராளிகளுடன் நடத்தும் போராட்டம் குறித்து பொய்யான பரப்புரைகளை ராணுவம் மேற்கொண்டுவருவதாக பிடிஎம் இயக்கம் குற்றஞ்சாட்டியது. மேலும், ராணுவத்தின் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளால் ஆயிரக்கணக்கான பேர் கொல்லப்பட்டதாகவும் காணாமல்போனதாகவும் இவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், பேரணிகளில் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசுவதாக கூறி மன்சூர் பாஷ்டீன் உட்பட ஆறு பேரை பாகிஸ்தான் அரசு திங்களன்று கைது செய்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மன்சூர் பாஷ்டீனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதையும் படிங்க: பாறைகளில் சிக்கித் தவித்த 536 மீனவர்கள் மீட்பு!