பிரிட்டன் நாட்டிலிருந்து 1997ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற ஹாங்காங், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட தன்னாட்சி அதிகாரம் பெற்ற பகுதியாக இருக்கிறது. ஹாங்காங்கின் வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவை மட்டுமே சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. மற்ற அனைத்துத் துறைகளையும் மக்களால் ஹாங்காங் அரசே நிர்வகித்துவருகிறது.
இருப்பினும், ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் சீனா தொடர்ந்து பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது. இந்நிலையில் ஹாங்காங் தன்னாட்சியை நீர்த்துப்போகச் செய்யும்வகையில் தேசியப் பாதுகாப்பு மசோதாவை சீன அரசு சமீபத்தில் நிறைவேற்றியது.
இது ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கத் தேவையான கடும் நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரத்தைச் சீன அரசுக்குத் தருகிறது.
சீனாவின் இந்தப் புதிய சட்டம் ஹாங்காங் மாகாணத்தின் தன்னாட்சி அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்யும்வகையில் உள்ளதாகக் கூறி அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குற்றஞ்சாட்டிவருகின்றன.
இந்நிலையில், சீனாவின் ஆளுகைக்கு உள்பட்ட மற்றொரு தன்னாட்சிப் பகுதியாக விளங்கும் தைவானிலுள்ள மாணவர்கள் இந்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"சீன அரசே! உன் நடவடிக்கையை நினைத்த வெட்கப்படுகிறேன்" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீனாவின் இறையாண்மையைக் காக்க இதுபோன்ற சட்டங்கள் அவசியம் என்றும் இச்சட்டத்தால் ஹாங்காங் மக்கள் எந்தவகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் சீன அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி ஹாங்காங் தன்னாட்சி பெற்ற மாகாணம் அல்ல - அமெரிக்கா அறிவிப்பால் அதிர்ச்சி