ETV Bharat / international

தாலிபான் ஆட்சி எதிரொலி - ஹிஜாப், டர்பன் விலை கிடுகிடு உயர்வு - சர்வதேச செய்திகள்

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஹிஜாப், டர்பன்களின்(தலையைச் சுற்றி போடும் துணி) விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Afghanistan
Afghanistan
author img

By

Published : Aug 23, 2021, 7:04 PM IST

20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கா-தாலிபான் அமைதி ஒப்பந்தத்தின்படி, ஆப்கனில் இருந்து அமெரிக்கப்படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அங்கு அதிபர் அஷ்ரஃப் கனியின் ஆட்சி வீழ்ந்து தாலிபான்கள் பிடியில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது.

அமெரிக்கா-தாலிபான் அமைதி ஒப்பந்தத்தின்படி ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், அங்கு அதிபர் அஷ்ரஃப் கனியின் ஆட்சி நிறைவடைந்துள்ளது.

அங்கு நிலவிய ஜனநாயக ஆட்சி முடிவுக்கு வந்ததால், சிவில் உரிமைகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.

ஹிஜாப், டர்பன் விலை கிடுகிடு உயர்வு

அங்கு இஸ்லாமிய ஷரியத் சட்டத்தின்படி, தாலிபான் ஆட்சி நடத்தும் என்பதால், மக்கள் அதற்கேற்ப வாழ்க்கை சூழலை மாற்றிவருகின்றனர்.

அந்நாட்டுப் பாரம்பரிய முறைப்படி பெண்கள் ஹிஜாப்களையும், ஆண்கள் டர்பன்களையும் அதிகளவில் வாங்கிக்குவிக்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஹிஜாப், டர்பன்களின் (தலையைச் சுற்றி போடும் துணி) விலை பெரும் உயர்வைக் கண்டுள்ளது.

300 ஆப்கனிக்கு விற்றுவந்த டர்பன் தற்போது பத்து மடங்கு உயர்ந்து மூவாயிரம் ஆப்கனிக்கும், ஆயிரம் ஆப்கனிக்கு விற்றுவந்த ஹிஜாப் ஆயிரத்து ஐநூறு ஆப்கனிக்கும் விற்கப்படுவதாக உள்ளூர் கடைக்கார்கள் தெரிவிக்கின்றனர்.

முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு கடையில் ஆறு அல்லது ஏழு டர்பன்களே விற்பனை ஆகிவந்த நிலையில், தற்போது 30க்கும் மேற்பட்ட டர்பன்கள் விற்பனை ஆவதாக உள்ளூர் கடைக்காரர் காஜ்வா அப்துல் ஜப்பார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கனில் சிக்கியுள்ள அமெரிக்கர்கள் - மீட்புப் பணி தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.