ETV Bharat / international

ஈடிவி பாரத் எக்ஸ்குளூசிவ்: ஈஸ்டர் தேவாலயத் தாக்குதல் நீதிக்காக இன்னும் காத்திருக்கிறோம்.. ! - தேவாலயத்தின்  திருத்தந்தை ஜூட் பெர்ணான்டோ

இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் களத்திலிருந்து ஒலிக்கிறது ஈடிவி பாரத்தின் குரல். கடந்த ஈஸ்டரின் போது பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தின்  திருத்தந்தை ஜூட் பெர்ணான்டோ ஈடிவி பாரத் தலைமை செய்தியாசிரியர் நிஷாந்த் சர்மாவுக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியின் தமிழாக்கம் இதோ...

srilanka elections
author img

By

Published : Nov 15, 2019, 2:06 AM IST

இலங்கை அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் திருநாள் போது தாக்குதலுக்குள்ளான புனித அந்தோணியார் தேவாலயத்துக்குப் பயணம் மேற்கொண்டது ஈடிவி பாரத். தேர்தலில் அங்கு வசிக்கும் கிறிஸ்துவ சிறுபான்மையினரின் வாக்கு முக்கிய பங்கு வகிக்கும் என்ற நிலையில், அங்குள்ள கள யதார்த்தத்தைப் பிரத்தியேகமாகப் படம் பிடித்துத் தருகிறது. ஈடிவி பாரத் தலைமை செய்தி ஆசிரியர், நிஷாந்த் சர்மா புனித அந்தோணியார் தேவாலயத்தின் திருத்தந்தை ஜுட் பெர்ணான்டோவிடம் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டார்.

அப்போது பேசிய தந்தை பெர்ணான்டோ, 'நாங்கள் நீதிக்காக இன்னும் காத்திருக்கிறோம். தேவாலயம் தனக்கான நீதியை எதிர்பார்த்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது யார், இந்த கொடூரம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும்' எனத் தெரிவித்தார்.

மேலும், 'ஆரம்பக்கட்டத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து எந்தவொரு முன்னேற்றமும் வெளிவராத நிலையில், தேர்தலில் கிறிஸ்துவர்களின் வாக்கு குறித்து அவர் தெரிவித்ததாவது, வாக்காளர்களின் முடிவுகளில் ஒரு பொழுதும் தேவாலயம் தலையிட்டதில்லை. எந்தவொரு கட்சி சார்ந்தோ, வேட்பாளர் சார்ந்தோ எந்த முன்முடிவுகளும் எடுத்ததில்லை. இதற்கு முன்னரும் பல தேர்தல்கள் நடந்துள்ளன. அவற்றில் வாக்காளர்கள் சுதந்திர மனநிலையுடன் வாக்களிப்பார்கள்' எனத் தெரிவித்தார்.

தேவாலயத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பெரும்பாலான கிறிஸ்துவ மக்களுக்கு அதிருப்தி நிலவிவருகிறது. இது குறித்து அரசின் மீது நம்பிக்கையின்மை நிலவுவதாகக் கருதப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாகத் தேவாலயம் சார்பில் இதுவரை நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன எனக்கூறிய தந்தை ஜூட் பெர்ணான்டோ, மக்கள் துன்பத்திலிருந்து மீண்டு வந்தநிலையில் மக்கள் தற்போது பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தி வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து, 'ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்துவருகிறோம். நமது செல்வங்களான பாரம்பரியம், கலாச்சாரம் கொண்டு பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம்' என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

வாடிகன் அமைப்பும் இது குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்து விசாரணையை முடுக்கிவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார் ஜூட் பெர்ணான்டோ.

இதையும் படிங்க: 'எர்டோகனின் தீவிர ரசிகன் நான்' - துருக்கி அதிபருக்கு ட்ரம்ப் புகழாரம்!

Intro:Body:

sd

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.