சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் ஆகிய இருவரும் வரும் 11ஆம் தேதியிலிருந்து மாமல்லபுரத்தில் மூன்று நாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையடுத்து ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் தங்குவதையொட்டி அக்டோபர் 4ஆம் தேதியிலிருந்து அந்த ஹோட்டல் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நைஜீரிய நாட்டு இளைஞர் CHINEDAU LIVINUS AHEWKE(33) என்பவர், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கவிருக்கும் ஹோட்டலில் முறையான ஆவணங்கள் இல்லாமல் தீடீரென்று நுழைந்தது காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரிய இளைஞர் தற்போது தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சீன உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் முழுக் கட்டுப்பாட்டில் கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், நைஜீரிய நாட்டு இளைஞர் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜி ஜின்பிங் சந்திப்புக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டில் திபெத் மாணவர்கள் கைது!