ETV Bharat / international

என்னது கேமராவை ஆஃப் செய்யலயா? அரசு அலுவலரின் உல்லாசத் தருணம் ஜூம் காலில் அம்பலம்! - கேப்டன் ஜீசஸ் எஸ்டில்

லண்டன் : ஜூம் காலின் கேமரா ஆனில் இருப்பதை அறியாமல், அரசு அலுவலர் ஒருவர் தனது செயலருடன் தனிமையிலிருந்த உல்லாசக் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oom
zoom
author img

By

Published : Aug 28, 2020, 4:23 PM IST

பிலிப்பைன்ஸ் நாட்டில் இரண்டு நாள்களுக்கு முன்பு பல மாகாணங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்துரையாடும் கூட்டத்திற்காக ஜூம் காலில் அனைவரும் திரண்டனர்.

அப்போது, காவிட் மாகாணம், பாத்திமா டோஸ் கிராமத்தில் பணியாற்றும் அரசு அலுவலர் கேப்டன் ஜீசஸ் எஸ்டில், ஜூம் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தனது செயலருடன் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். அதற்கு முன்னதாக தனது கேமராவை அவர் அணைக்கவும் செய்துள்ளார். ஆனால் கேமரா ஆஃப் ஆகாத நிலையில், அதனை அறியாத எஸ்டில் அறையின் ஒரு மூலையில் உல்லாசமாக இருந்துவிட்டு எதுவும் தெரியாத குழந்தைப் போல் ஜூம் மீட்டிங்கில் தொடர்ந்து கலந்து கொண்டுள்ளார்.

ஆனால், அக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர், இச்சம்பவங்களை முழுவதுமாக பதிவு செய்த நிலையில், அலுவலரின் இந்த உல்லாசப் பதிவு சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எஸ்டிலும் அவரது செயலரும் தங்களது செயலுக்காக மூத்த அரசு அலுவலர்களிடம் மன்னிப்பு கோரினர்‌‌. இருப்பினும் அலுவலரை பணியைவிட்டு நீக்க அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, ரியோ டி ஜெனிரோ நகர சபையின் ஜூம் கூட்டத்தின் போது பிரேசிலில் ஒரு ஜோடி இதேபோல் நெருக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.