பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதுவரை 31 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதில் 29 பேர் ராணுவ வீரர்கள் எனவும், இருவர் பொது மக்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தெற்கே உள்ள சுலூ பகுதியிலிருந்து புறப்பட்ட C-130 என்ற ராணுவ விமானம், ஓடுதளப் பாதையிலிருந்து விலகியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் 92 பேர் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தினர் எனவும் கூறப்படுகிறது.
மீட்புப் பணிகளில் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் விபத்து குறித்து விரிவான விசாரணை நடைபெறும் எனவும் அந்நாட்டின் ராணுவ செயலர் டெல்பின் லோரேன்சா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கோவாக்சின் தடுப்பூசி வாங்கியதில் முறைகேடு - பிரேசில் அதிபர் மீது விசாரணை