பாகிஸ்தான் நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவின் படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,603 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,694ஆக அதிகரித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக சிந்த் மாகாணத்தில் 19,924 பேரும், பஞ்சாப் மாகாணத்தில் 18,455 பேரும், கைபர் பக்துன்வா மாகாணத்தில் 7,155 பேரும், பலூசிஸ்தான் மாகாணத்தில் 3,074 பேரும், இஸ்லாமபாத்தில் 1,326 பேரும், கில்கித் பல்திஸ்தானில் 602 பேரும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 158 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இத்தொற்றால் கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1067ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த 24 மணிநேரத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 1064 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன்மூலம், கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,201ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரை 4,45,987 மாதிரிகள் கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், துபாயில் சிக்கித் தவித்த பாகிஸ்தானைச் சேர்ந்த 251 பேர் சிறப்பு விமான சேவை மூலம் இஸ்லாமாபாத்துக்கு வந்தடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குப் பறக்கும் அமெரிக்க வீரர்கள்!