உலகளவில் பிரபலமான சீனாவின் டிக்டாக் செயலியில், சென்சார் இல்லாததால் மோசமான காட்சிகள் அதிகம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. பல நாடுகள் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பிற்காக டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்திருந்தது. தற்போது, பாகிஸ்தானும் டிக்டாக் நிறுவனத்திற்கு கடைசி வார்னிங் அளித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிக்டாக், பிகோ லைவ் ஆகிய இரண்டு செயலிகளில் வருபவை சமூகத்தில் குறிப்பாக இளைஞர்களிடமும் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இச்செயலிகளில் ஒழுக்கக்கேடான, ஆபாசமான, மோசமான" உள்ளடக்கம் அதிகளவில் வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டினர். சிங்கப்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிகோ லைவ் செயலிக்கு தடை விதிக்கப்படுகிறது. சீனாவின் டிக்டாக் செயலி குறித்து நிறுவனத்திற்கு கடைசி வார்னிங் அனுப்பப்பட்டுள்ளது. தற்போதும், செயலியில் சென்சார் கொண்டு வராவிட்டால் கடைசியில் தடை விதிக்கப்படும்" எனக் எச்சரித்துள்ளனர்.
முன்னதாக, பப்ஜி கேமால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும், நேரம் வீணாகுவதாக மக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வந்ததை தொடர்ந்து, ஜூலை ஒன்றாம் தேதி முதல் பாகிஸ்தானில் பப்ஜி செயலிக்கு தடை விதிக்கப்பட்டது.