விடுதலையானவர்கள் தங்களது நாட்டிற்கு திரும்ப வந்தததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.
அவர்களில் ஒருவரான கான்பூரைச் சேர்ந்த சன்சுதீன் என்பவர் கூறுகையில், “28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று இந்தியா வந்துள்ளேன். பெற்றோருடன் சண்டையிட்டு விசாவுடன் பாகிஸ்தான் சென்றேன். பின்னர் எனது விசா காலாவதியாகிவிட்டது என 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் காவல் துறையினர் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்” எனத் தெரிவித்தார்.
இது குறித்து ஏஎஸ்ஐ அருண் பால் கூறுகையில், நேற்று (அக். 26) மாலை சுமார் 4 மணியளவில் பாகிஸ்தான் அலுவலர்கள் இந்தியக் கைதிகள் ஐந்து பேரை ஒப்படைத்தனர். அதில் ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அமிர்தசரஸின் காவல் துணை ஆணையர் அறிவுறுத்தலின்படி, அந்த ஐந்து பேரையும் சிறையில் வைத்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.