ETV Bharat / international

பாகிஸ்தான்: கரோனா பாதிப்பு 1,600ஐ கடந்தது! - கொரோனா

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,600ஐ கடந்துள்ளது. இதனால் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Pakistan government
Pakistan government
author img

By

Published : Mar 30, 2020, 4:44 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது சீனாவில் படிப்படியாக குறைந்துவருகிறது. இருப்பினும் மற்ற நாடுகளில் வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. சீனாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான், தெற்கு ஆசியாவிலேயே வைரஸ் தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக திகழ்கிறது.

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) மட்டும் பாகிஸ்தானில் குறைந்தது 100 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம் பாகிஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,600ஐ தாண்டியுள்ளது.

குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இதுவரை 593 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிந்து மாகாணத்தில் 502 பேருக்கும் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 192 பேருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்தில் 141 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் குறைந்தபட்சமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆறு பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறி அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து மறுத்துவருகிறார்.

இதையும் படிங்க: வூகான் நகருக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.