’பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருடைய உடல்நிலை மோசமடைந்ததையடுத்து சிகிச்சையளித்துவந்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக நவாஸை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்படி, சிகிச்சைக்காக ஷெரிப் லண்டன் சென்றுள்ளார். ஒரு மாதத்திற்கு மட்டுமே வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நான்கு வார அனுமதி முடிவடைந்ததைத் தொடர்ந்து வெளிநாட்டில் தங்கியிருப்பதை நீட்டிக்ககோரி பஞ்சாப் உள்துறை செயலாளருக்கு ஷெரிப் கடிதம் எழுதியிருந்தார்.
இதையடுத்து ஷெரிப் தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. நான்கு பேர் கொண்ட இந்தக் குழு, பஞ்சாப் சட்ட அமைச்சர் முகமது பஷரத் ராஜா தலைமையில் மனு குறித்து பரிசீலணை செய்யும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "நவாஸ் ஷெரிஃப்பை சுட்டுக் கொல்லுங்கள்"