பாகிஸ்தானின் துறைமுக நகரான குவாதரில் நட்சத்திர விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த விடுதிக்குள் பயங்கர ஆயுதங்கள், ராக்கெட் லாஞ்சர்களுடன் புகுந்த பயங்கரவாதிகள் முதலில் வாயிற்காவலரை சுட்டுக் கொன்றனர். பின்னர் அங்கிருந்த வெளிநாட்டவரை குறிவைத்ததாகக் கூறப்படுகிறது.
அதற்குள் தகவலறிந்து விடுதிக்கு வந்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் விடுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இந்தச் சண்டையின்போது பாதுகாப்புப் படையினர் விடுதிக்குள் அதிரடியாக புகுந்த மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர்.
மேலும் அச்சத்தில் மயங்கியவர்கள், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.