ETV Bharat / international

சீன முதலீட்டாளர்களுக்கு இனி முக்கியத்துவம் - இம்ரான் கான் அதிரடி முடிவு - சர்வதேச செய்திகள்

இஸ்லாமாபாத்: சீன முதலீட்டாளர்களுக்கு பாகிஸ்தானில் பிரதான முக்கியத்துவம் வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

China
China
author img

By

Published : Aug 25, 2020, 8:02 PM IST

சீனாவுடன் பாகிஸ்தான் தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கரோனா காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சியை பாகிஸ்தான் சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டில் சீனா நிறுவனங்கள் முதலீடு செய்ய அவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சீனா நிறுவனங்களுக்கு பிரதான முக்கியத்துவத்தை பாகிஸ்தான் தரும் எனத் தெரிவித்த அவர், அந்நாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் பிரந்திய அலுவலகங்களை நிறுவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தற்போது பெரும் கடும் சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தான், அந்நிய நாடுகள், அமைப்புகளிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்துவருகிறது. சௌதி அரேபியாவுடன் அந்நாட்டின் உறவு சிக்கலுக்குள்ளாகியதால் தற்போது சீனாவிடம் முழுமையாக சரணடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? - விசாரணை கோரும் ஐரோப்பிய ஒன்றியம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.