ETV Bharat / international

மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூட்டு சதி - மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல்

டெல்லி: மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பதினொரு பயங்கரவாதிகள் உதவியாக இருந்ததை பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்ஐஏ) ஏற்றுக்கொண்டது.

மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதல்: பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூட்டு சதி

author img

By

Published : Nov 12, 2020, 3:18 AM IST

கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட பாகிஸ்தானில் உள்ள முல்தான் மாகாணத்தை சேர்ந்த முஹம்மது அம்ஜத் கான் என்பவர் அல் ஃபவுஸ் என்ற படகு வாங்குவதில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-ஹுசைனி படகின் கேப்டனாக இருந்த பஹவல்பூரைச் சேர்ந்த ஷாஹித் கபூர், பயங்கரவாதிகள் அல் ஃபவுஸ் படகை பயன்படுத்த உதவியாக கூறப்படுகிறது.

சாஹிவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஹம்மது உஸ்மான், லாகூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீக்-உர்-ரெஹ்மான், ஹபீசாபாத்தைச் சேர்ந்த ரியாஸ் அகமது, குஜ்ரான்வாலா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது முஷ்டாக், தேரா காசி கான் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நயீம், சர்கோதா மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷகூர், முஹம்மது சபீர் லோத்ரான் மாவட்டம், ரஹீம் யார்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷாகில் அகமது உள்ளிட்டவர்கள் ஐக்கிய நாடுகள் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதக் குழுவின் உறுப்பினர்களான லஷ்கர் -இ -தயிப் அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தின் மோசமான நடவடிக்கைகளுக்காக இந்தியா மீண்டும் மீண்டும் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடு என்று கூறியுள்ளது. எவ்வாறாயினும், இந்திய அரசின் இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதாகக் கருதப்படுகிறது. இதன்மூலம் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 1210 உயர்மட்ட, பயங்கரவாதிகளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், ஹபீஸ் சயீத், மசூத் அசார் அல்லது தாவூத் இப்ராஹிம் ஆகியோர் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

ஹபீஸ் சயீத் ஐக்கிய நாடுகளால் பட்டியலிடப்பட்ட சர்வதேச பயங்கரவாதி, 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி, ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைவர் மசூத் அசார் கடந்த ஆண்டு 40 இந்திய துணை ராணுவப் படைகளை கொன்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பாகிஸ்தான் நீதிமன்றம் சயீத்திற்கு பயங்கரவாதத்தை வளர்க்க நிதியளித்ததாக கூறி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த பட்டியலில், இப்போது லண்டனில் வசிக்கும் முத்தாஹிதா கவுமி இயக்கத்தின் (எம்.க்யூ.எம்) தலைவர், பாகிஸ்தான் எதிர்க்கட்சி பி.எம்.எல்.என் தலைவர் நசீர் பட் மற்றும் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப், முன்னாள் பிரதமர் ஷவுகத் அஜீஸ் ஆகியோரின் பெயரை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த மாதம் நடைபெற்ற நிதி அமர்வு பணிக்குழு, பாகிஸ்தானை 'சாம்பல் பட்டியலில்' தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது, நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண பாகிஸ்தானுக்கு "என்றென்றும்" வாய்ப்பு வழங்கப்படாது என்று எச்சரித்துள்ளது. FATF இன் செயல் திட்டத்தை மீண்டும் மீண்டும் பின்பற்ற தவறினால், ஒரு நாடு “தடுப்புப்பட்டியலில்” சேர்க்கப்படும்.

பாகிஸ்தான் தனது 27 செயல் திட்டங்களில் 21 ஐ மட்டுமே பூர்த்தி செய்துள்ளதாகவும், முக்கிய விடயங்களுக்கு இணங்கத் தவறிவிட்டதாகவும் FATF கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.