புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தான் வான்வெளி பகுதியில் விங் கமாண்டர் அபிநந்தன் நுழைந்து தாக்குதல் நடத்திய சமயத்தில், பாகிஸ்தான் படை வீரர்களிடம் சிக்கிக்கொண்டார்.
பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது அபிநந்தன் பிடிபட்ட நேரத்திலிருந்த அவரது தோற்றத்தைப் பிரதிபலிக்கும் விதமாக, பாகிஸ்தான் அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் சிலையை அந்நாட்டின் வான்வெளிப் படைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதனுடன் அவர் காபி குடித்த குவளையையும், அவர் சென்ற விமான பாகங்களையும் காட்சிக்கு வைத்திருந்தது.
விமானப்படை ஆண்டு விழா - வானில் சாகசம் புரிந்த அபிநந்தன்
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய பாதுகாப்புப் படை பதிலடி கொடுத்ததையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினரின் வசிப்பிடத்தைக் குண்டு வீசி அழிக்கப் பாகிஸ்தான் போர் விமானங்கள் முற்பட்டன. பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை முன்னரே கணித்த இந்தியா, பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையிலேயே விரட்டியடித்தன.
இதில் ஆகாய மார்க்கமாக ஏவும் ஏவுகணையைச் சுமந்து வந்த பாகிஸ்தானின் எப்.16 விமானத்தை, மிக் 21 விமானத்திலிருந்து தமிழ்நாட்டு வீரர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். அப்போது, பாகிஸ்தான் விமானம் நடத்திய எதிர்த் தாக்குதலில் அபிநந்தனின் விமானமும் சேதம் அடைந்ததால் பாராசூட் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தரையிறங்கியபோது அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைபிடித்தது குறிப்பிடத்தக்கது