அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஈரான் பாதுகாப்பு படை தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உட்சக்கட்ட பதற்றம் நிலவிவருகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான், "மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவிவரும் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. மோதல் மேலும் உக்கிரமடைவதை தடுக்க இருநாடுகளும் (அமெரிக்கா, ஈரான்) அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே, பிராந்தியப் பிரச்னைகளால் பாகிஸ்தான் பெரும் அவதியடைந்துள்ளது. எனவே, இதுபோன்ற மோதல்களில் பாகிஸ்தான் தலையிடாது" என திட்டவட்டாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த பிரச்னை குறித்து பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஜாவத் பாஜ்வாவிடம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், பிரதமர் இம்ரான் கான் இவ்வாறு பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ஈரான் தாக்குதலில் ஒரு அமெரிக்கர்கூட மரணிக்கவில்லை - ட்ரம்ப்