உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பாகிஸ்தானையும் பெரிதும் பாதித்துள்ளது. இந்த வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்க உலக நாடுகள் திணறிவருகின்றன. கரோனாவின் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டபோது, பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் நாட்டில் ஊரடங்கிற்கு சாத்தியம் இல்லை என்று அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ள ஏதுவாக அந்நாட்டின் மத்திய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான், சர்வதேச நிதியத்திடம் இருந்து அவசர கடனாக 1.39 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் மேற்கொள்ள இருக்கும் பொருளாதார நடவடிக்கைகளால், டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் பண மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலகளவில் பரவிவரும் கரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆறு வாரங்களில் பாகிஸ்தானின் தொழில் மூலதன பத்திரங்களில் முதலீடு செய்திருந்த குறுகிய கால வெளிநாட்டு முதலீட்டாளர்களால் சுமார் 2.69 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மூலதனம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பண இருப்பு ஓரளவு குறைந்துவிட்டது.
முன்னதாக, வெளிநாட்டு நாணய இருப்பு 2020 ஏப்ரல் 10ஆம் தேதியன்று 10.97 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துவிட்டது என்று அந்நாட்டு வங்கி தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்த சர்வதேச நிதியகம், தொற்று நோய்யை எதிர்கொள்ளும் வகையில், அவசரகால தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தானுக்கு உதவுவதற்காக சர்வதேச நிதியத்தின் நிர்வாகக் குழு கடந்த வாரம் குறைந்த வட்டிவிகித அவசரக் கடனுக்கு ஒப்புதல் அளித்திருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவும் சூழலில், அதனை எதிர்கொள்ள இதுபோன்ற கடன் வழங்க உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் பார்க்க: மோடியை பாராட்டி பில்கேட்ஸ் கடிதம்