பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் சட்டத்தில் தற்போது சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாட்டின் தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்குப்பதிவிற்கு ஈ.வி.எம். (EVM) கருவிகளை பயன்படுத்த தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதற்கான சட்டத்திருத்தத்தை பாகிஸ்தான் அமைச்சரவை நிறைவேற்றிய நிலையில் அதற்கு அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி ஒப்புதல் அளித்துள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு வாழ் பாகிஸ்தானியர்கள் பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் வாக்களிக்கவும் அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தேவையான தரவுகளை அந்நாட்டு அரசு தயார் செய்துவருவதாக கூறியுள்ளது. மேற்கண்ட திருத்தங்களுக்கான பணிகள் அனைத்தும் விரைந்து செயல்படுத்தப்பட்டு, 2023ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் இவை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.