ETV Bharat / international

சீனா செல்கிறார் இம்ரான் கான்! - Pakistan PM Imran Khan Tour of China

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் இன்று சீனா செல்கிறார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார்.

Imran
author img

By

Published : Oct 7, 2019, 1:51 PM IST

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக இன்று சீனா செல்கிறார். இந்தப் பயணத்தின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசுகிறார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையோன உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேசப்படவுள்ளது.

தொழிற்சாலை, சமூகப் பொருளாதாரம், சீன-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம், விவசாயத்தில் இரு நாடுகளும் இணைந்து பங்களிப்பது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

மேலும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் சீன-பாகிஸ்தான் பொருளாதார மாநாட்டில் இம்ரான் கான் பேசவுள்ளார். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவளித்துவருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் செல்கிறார். இது இம்ரான் கானின் மூன்றாவது சீனப் பயணமாகும். இந்தப் பயணத்தின்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷி, ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ராஷீத், திட்டத் துறை அமைச்சர் குஷ்ரோ பஹ்திகார், பொருளாதார ஆலோசகர் ஹபீஸ் ஷேக் ஆகியோரும் உடன் செல்கின்றனர்.

இதையும் படிக்கலாமே

'இம்ரான் கான், தலிபான் பிரதிநிதிகளைச் சந்திக்கவில்லை' - உதவியாளர் ட்வீட்!

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்: சவுதி பட்டத்து இளவரசருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.