ETV Bharat / international

சீக்கியர்களின் வழிபாட்டிற்காக கர்தார்ப்பூர் சாலை மீண்டும் திறப்பு!

author img

By

Published : Oct 3, 2020, 4:55 PM IST

இஸ்லாமாபாத்: கோவிட் -19 நிலைமை மேம்பட்டுள்ளதால் குருத்வாரா வழிப்பாட்டிற்காக கர்த்தார்ப்பூர் சாஹிப் பாதையை மீண்டும் திறக்கவுள்ளதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

சீக்கியர்களின் புனித யாத்திரைக்காக கர்த்தப்பூர் எல்லையை திறந்த பாகிஸ்தான் அரசு !

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் கர்த்தார்ப்பூரில் சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரின் நினைவாக பாகிஸ்தானில் உள்ள கர்த்தாப்பூர் சாஹிப் குருத்வாரா (புனித தலம்) அமைக்கப்பட்டது.

உலகெங்கிலும் உள்ள சீக்கியர்கள் இந்த குருத்வாராவுக்கு வந்து வழிபாடு நடத்திசெல்வார்கள். இங்கு மார்ச் மாதம் முதல் கோவிட்-19 பரவல் காரணமாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பாகிஸ்தானில் கோவிட் -19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் குருத்வாரா வழிப்பாட்டிற்காக கர்த்தார்ப்பூர் சாஹிப் பாதையை மீண்டும் திறக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

கர்த்தார்ப்பூர் எல்லையை நல்லெண்ண அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இந்திய பார்வையாளர்கள் தினமும் விடியற்காலை முதல் மாலை வரை கர்த்தார்ப்பூர் குருத்வாரா வந்துசெல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவின் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் சாஹிப் மற்றும் பாகிஸ்தானின் கர்த்தார்ப்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப் ஆகியோரை இணைக்கும் 4.7 கிலோமீட்டர் நீளமுள்ள கர்தார்ப்பூர் சாஹிப் எல்லையானது இந்த அடிப்படையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து திறக்கப்படுகிறது. கோவிட் -19 தொற்றுநோயை அடுத்து, கர்த்தார்ப்பூர் பாதை இருநாட்டு அரசுகளால் மார்ச் மாதம் மூடப்பட்டது.

இப்போது உலகெங்கிலும் மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து, வழிபாடுகள் மேற்கொள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படுகின்றன. அந்த வகையில் அனைத்து சீக்கிய யாத்ரீகர்களுக்காக பாகிஸ்தான் அரசு கர்த்தப்பூர் எல்லை திறக்க அனுமதி அளித்துள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஜா ரஞ்சித் சிங்கின் நினைவுநாளை நினைவுகூரும் வகையில் கடந்த ஜூன் மாதத்தில் கர்த்தார்ப்பூர் பாதையை மீண்டும் திறக்க பாகிஸ்தான் அரசு முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்நாட்டு அரசின் இந்த அறிவிப்பை கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா நிராகரித்தது.

இந்த ஆன்மிக பயணத்தை மேற்கொள்ளவுள்ளவர்கள் குறைந்தது 7 நாள்களுக்கு முன்னதாக அனுமதிக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி குருத்துவாராவிலிருந்து பத்தாயிரம் பேருக்கு உணவு வழங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.