பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தற்போது லன்டனில் வசித்து வருகிறார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் உடல்நலக்குறைவை காரணம் காட்டி சிகிச்சைத் தேவைக்காக அவர் லண்டன் சென்றார்.
அவர் பிரதமர் பதவியிலிருந்தபோது பெரும் ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், பாகிஸ்தான் நீதிமன்றம் அவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து சிறை தண்டனை விதித்திருந்தது. இந்நிலையில், சிகிச்சையைக் காரணம் காட்டி எட்டு வாரங்கள் பிணை பெற்ற அவர், அரசிடம் அவசர ஒப்புதல் வாங்கி வெளிநாடு சென்றார்.
அவர் மீதான ஊழல் வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உடல் நிலை கரோனா ஆகியவற்றை காரணம் காட்டி தன்னால் பாகிஸ்தான் வர முடியாது என நவாஸ் ஷெரிப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவாஸ் நாடு திரும்புவதற்கு செப்டம்பர் 10ஆம் தேதியை காலக்கெடுவாக அந்நாட்டு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இறுதித் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், அடுத்த விசாரணைக்குள் நவாஸ் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உலகளவில் 2 கோடியே 56 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!