ETV Bharat / international

பாகிஸ்தான் குடியரசு தின ஒத்திகையில் விபத்து - விமானி உயிரிழப்பு!

author img

By

Published : Mar 11, 2020, 5:22 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகைகளை மேற்கொண்டிருந்தபோது எஃப்-16 (F-16) போர் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.

இஸ்லாம்பாத்
இஸ்லாம்பாத்

பாகிஸ்தானில் வரும் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவையொட்டி, அதற்கான ஒத்திகை அணிவகுப்புகள் நடைபெற்றது. அப்போது, விமான ஒத்திகைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜே.எஃப்-17 தண்டர் விமானமும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப் -16 விமானமும் ஈடுபட்டது. அப்போது, எஃப் -16 விமானம் இஸ்லாமாபாத்தில் ஷகர்பாரியன் பகுதியில் உள்ள வனப்பகுதிக்கும் மேல் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இதில், சம்பவ இடத்திலேயே நவுமன் அக்ரம் (Nouman Akram) என்னும் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள பாகிஸ்தான் விமானப்படை (PAF) உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், மியான்வாலியில் உள்ள எம். எம். ஆலம் தளத்தின் அருகே பயிற்சி விமானம் மோதியதில், இரண்டு பாகிஸ்தான் விமானிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இத்தாலியைத் துரத்தும் கொரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.