ஈரான் ராணுவத்தின் கட்ஸ் படைப் பிரிவின் தளபதியான குவாசிம் சுலைமானை அமெரிக்கக் கொன்றதற்கு, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
அதன் விளைவின் ஒரு பகுதியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. அதாவது 65 டாலர்கள் 54 சென்ட்ஸாக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய், தற்போது 4 டாலர்கள் 53 சென்ட்ஸாக உயர்ந்து 69 டாலர்களாக உயர்ந்துள்ளது.
இதனால் ஜப்பான் தலைநகரம் டோக்கியோ பங்குச்சந்தையில் 2.5 விழுக்காடு குறைந்து நிக்கை (Nikkei) 225 பங்குகளாக உள்ளன. மேலும் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் ஜப்பான் நாட்டு ரூபாய் யென் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்க: இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.3 லட்சம் கோடி இழப்பு!