சீனாவில் உள்ள சிறுபான்மை பிரிவினாரன உய்கர் இஸ்லாமியர்கள் மீது தொடர்ச்சியான வன்முறைகள், கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுவருவதாகத் தொடர் குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. சீனாவின் வடமேற்கு மூளையில் உள்ள தன்னாட்சி மாகாணமான சின்ஜியாங் பகுதியில் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உய்கர் என்ற சிறுபான்மையின இனக் குழு மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களின் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும்விதமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, லட்சக்கணக்கான உய்கர் இன மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து கம்யூனிச சித்தாந்தங்களை வற்புறுத்தி கற்பித்து, அவர்களது கலாசாரத்தை அழித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, உய்கர் மக்கள் மீது மேலும் பல அச்சுறுத்தல்களை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக முக்கிய ஆவணங்கள் வெளியாகியுள்ளது. இதில் வெளிநாட்டில் வாழும் 300க்கும் மேற்பட்ட உய்கர் மக்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் உளவு செய்யும் சீன அரசு, அவர்களை மீண்டும் தனது நாட்டுக்குள் அனுமதிக்க மறுப்பதாகத் தெரிகிறது. மேலும், அவர்களின் உறவினர்களை மிரட்டி பல அடக்குமுறை நடவடிக்கைகளை ராணுவம் மூலம் கட்டவிழ்பதும் ஆவணத்தகவல் மூலம் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சீனாவில் மீண்டும் கரோனா பரவல்? ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து