ETV Bharat / international

அணு ஆயுதத் திட்டத்திற்காக வடகொரியா செலவுசெய்த தொகை இத்தனை கோடியா...! - வடகொரியா ஆணு ஆயுத செலவு

சியோல்: வடகொரியா தனது அணு ஆயுதத் திட்டத்திற்காக 2019ஆம் ஆண்டு 620 மில்லியன் டாலர் செலவழித்துள்ளதாகச் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்புக்குழு தெரிவித்துள்ளது.

North Korea
North Korea
author img

By

Published : May 14, 2020, 4:14 PM IST

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, அணு ஆயதங்களை ஒழிக்கும் சர்வதேச பரப்புரையை மேற்கொண்டுவரும் சர்வதேச அணு ஆயுத எதிர்ப்புக் குழு ஒன்று வடகொரியா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் அணு ஆயுதத் திட்டத்திற்காகச் செலவழித்த தொகை குறித்து விவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2009ஆம் ஆண்டில் வடகொரியா அதன் மொத்த தேசிய வருமானத்தில் 35 விழுக்காட்டை ராணுவத்திற்காக மட்டுமே செலவழித்துள்ளது.

2011ஆம் ஆண்டும் வடகொரியா, அதன் ராணுவ வரவு-செலவுத் திட்டத்தில் ஆறு விழுக்காட்டை அணுசக்தி மேம்பாட்டிற்காகச் செலவிட்டிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு அமெரிக்கா மதிப்பில் 620 மில்லியன் டாலர் பணத்தை வடகொரியா அதன் அணுசக்தித் திட்டத்திற்காகச் செலவிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டும் இதே தொகையை அணு ஆயுதத் திட்டத்திற்காக வடகொரியா செலவு செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

வடகொரியாவில் மொத்தம் 35 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தரையிலிருந்தும், நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் செலுத்தக்கூடிய அணுசக்தித் திறன்கொண்ட ஏவுகணைகளை வடகொரியா உருவாக்கிவருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தென்கொரியாவில் கட்டுக்குள் வரும் கரோனா வைரஸ் தொற்று?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.