ETV Bharat / international

தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரமலான் தொழுகைக்கு ஒன்றுகூடிய மக்கள்

கராச்சி: தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளி மைதானத்தில் ஒன்றுகூடி ரமலான் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Eid prayers in Karachi
Eid prayers in Karachi
author img

By

Published : May 24, 2020, 4:46 PM IST

பாகிஸ்தானில் கோவிட்-19 தொற்று முதலில் பிப்ரவரி 26ஆம் தேதி உறுதி செய்யபட்டது. பின் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து அந்நாட்டில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில் வரும் மே 31ஆம் தேதி வரை பகுதி ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் சிறப்புப் பிரார்த்தனைகளை தவிர்த்துவிட்டு, வீடுகளிலேயே பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசு கேட்டுக்கொண்டது.

இருப்பினும் அரசின் அறிவுறுத்தலை புறம் தள்ளிவிட்டு, சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கராச்சியிலுள்ள மைதானத்தில் திரண்டு ரமலான் சிறப்புப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல தென்கொரியாவில் நடைபெற்ற மத நிகழ்ச்சி காரணமாக 46 பேருக்கு கரோன வைரஸ் தொற்று பரவியது குறிப்பிடத்தக்கது.

தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்காமல் ரமலான் தொழுகை

பாகிஸ்தானில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரமலான் பண்டிகையின்போது நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளையும் மூட வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். இருப்பினும் மருத்துவர்களின் கோரிக்கைக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செவி சாய்க்கவில்லை.

பாகிஸ்தானில் தற்போது வரை 52,437 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,101 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: 80 மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.