ETV Bharat / international

கிம் ஜாங் உன் மரணித்து விட்டாரா? புதிய தகவலால் பரபரப்பு!

author img

By

Published : May 1, 2020, 11:34 PM IST

சியோல்: கிம் ஜாங் உன் இறப்பு குறித்த செய்திகள் 99 விழுக்காடு உண்மை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Kim Jong un  Kim unwell  Kim Jong un halth  Speculation on Kim's death  கிம் ஜாங் உன் மரணித்து விட்டாரா  வடகொரியா அதிபர், உயிரிழப்பு, தென்கொரியா

வட கொரியாவில் இருந்து வெளியேறிய ஒருவர், தென் கொரியாவில் சட்டம் இயற்றுபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கிம் ஜாங்-உன்னின் உடல்நலம் குறித்த ஊகங்களுக்கு மத்தியில், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிம் இறந்துவிட்டார் என்பது '99 விழுக்காடு' உறுதி என்று தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 3 வாரங்களாக கிம் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத சூழ்நிலையில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏப்ரல் 15ஆம் தேதி நடந்த தேர்தலில், ஒரு சிறு கட்சியின் பிரதிநிதித்துவ இடத்தைப் பெற்ற ஜி சியோங்-ஹோ, யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'இருதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் எவ்வளவு காலம் தாங்கியிருப்பார் என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
கடந்த வார இறுதியில் கிம் இறந்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்தது. இந்த வார இறுதியில் வட கொரியா, இது தொடர்பான அறிவிப்பை வெளியிடக்கூடும்.
இது 100 விழுக்காடு உறுதிபடுத்தப்படவில்லை. ஆனால், 99 விழுக்காடு என்னால் கிம் இறந்து விட்டார் என்று உறுதியாக சொல்ல முடியும். வட கொரியா ஒரு சிக்கலான அடுத்தடுத்த பிரச்னையுடன் சிக்கிக் கொண்டிருக்கிறது.

பல வல்லுநர்கள் ஏற்கெனவே ஊகித்துள்ளதால், வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ-ஜாங் அவருக்குப் பின் வர வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தார்.

எனினும் இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரத்தை, அவர் வெளியிடவில்லை. அவரது கூற்றை தனிப்பட்ட வகையில் உறுதிபடுத்த முடியாது என்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிம் உடல் நலம் தொடர்பாக வட கொரியாவில் 'அசாதாரண' அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்று தென் கொரியாவின் குடியரசுத் தலைவர் அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முழு அடைப்பால் உழைப்பாளர்கள் கடும் பாதிப்பு: மம்தா பானர்ஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.