கரோனா வைரஸ் தாக்கம் தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. முதலில் சீனா, ஈரானில் மட்டும் இந்நோயின் தாக்கம் இருந்த நிலையில், பின்னர் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசிய உள்ளிட்ட அனைத்து கண்டங்களிலும் வைரஸ் பரவத் தொடங்கியது. மேலும் ஆப்ரிக்காவிலும் நோய்த் தாக்கம் தீவிரமடையும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தீவு நாடான நியூசிலாந்திலும் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமடையத் தொடங்கியுள்ளது. அந்நாட்டில் நோய்ப் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 100ஐத் தாண்டியுள்ள நிலையில், நோயின் தீவிரத்தை உணர்ந்த அந்நாட்டு அரசு அங்கு அவசர நிலையை அறிவித்துள்ளது. அத்துடன் ஒட்டுமொத்த நாட்டையும் லாக்டவுன் செய்துள்ளது.
நோய் தீவிரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக அங்கு ஒரு மாதத்திற்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அட்ரியன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்புக்கு பாகிஸ்தானில் லாக்டவுனுக்கு வாய்ப்பில்லை கைவிரித்த இம்ரான் கான்