கைலாஷ்-மானசரோவர் யாத்திரை செல்லும் பக்தர்கள் பயண தூரத்தைச் சுருக்கும் வண்ணம் உத்தரகண்ட் மாநிலம் தார்சூலாவிலிருந்து லிப்புலேக் என்ற சீன எல்லைப் பகுதி வரை அமைக்கப்பட்டுள்ள புதிய சாலையை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார்.
இதனிடையே, லிப்புலேக் பகுதிகள் தங்களுடையது என உரிமைக் கொண்டாடும் அண்டை நாடான நேபாளத்துக்கும் இந்தியாவுக்கு இடையே சர்ச்சை வெடித்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக நேபாள நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அந்நாட்டின் பிரதமர் ஒலி, "லிம்பியாதுரா, கலபானி, லிப்புலேக் பிரச்னையை நான் மூடி மறைக்க விரும்பவில்லை. அது குறித்து தீர்வு காணப்படும். இந்தியாவுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியை மீட்டெடுப்போம்" என்றார்.
இதையும் படிங்க : இந்தியா-நேபாளம் மோதலும், சீனாவின் தலையீடும்