நேபாளம் நாட்டு தலைநகர் காத்மாண்டுவில் உள்ள காட்டிகோலோ என்னும் குடியிருப்புப் பகுதியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் பலியாயினர். இது தொடர்பாக, காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, அப்பகுதியில் ராணுவம், பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, சுகேந்திரா என்னும் மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல்களில் படுகாயமடைந்த ஐந்து பேர் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்நிலையில் இத்தாக்குதல்களுக்கு, அந்நாட்டு அரசு தடைசெய்யப்பட்ட அமைப்பான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் நேபாள அரசைக் கண்டித்துள்ளனர்.
இதேபேன்று, கடந்த மார்ச் மாதம் நக்கூ பகுதியில் இயங்கிவரும் என்செல் என்னும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் மீது இந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. அதில், ஒருவர் பலியானார்.
இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் பலியான நிலையில், நேபாள நாட்டிலும் தற்போது வெடிகுண்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.