பிரதமர் கே.பி. சர்மா ஒலி டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்து, 2021 ஏப்ரல்-மே மாதங்களில் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்தபோது, அது 2015 செப்டம்பரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேபாள அரசியலமைப்பை மீறியதால், தற்போதைய நெருக்கடி தோன்றியுள்ளது. புதிய அரசியலமைப்பில் இது போன்று கலைப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. தற்போதைய பிரதமரை ஏதாவது ஒரு காரணத்திற்காக செயல்படவிடாமல் செய்து பெரும்பான்மை ஆதரவை இழப்பது போன்ற காரணங்களால் புதிய பிரதமரை நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுப்பதற்காக தெளிவான ஏற்பாடு உள்ளது.
அவரது மூத்த கட்சி சகாக்கள் அவரை சுமுகமாக ஆள அனுமதிக்கவில்லை என்று நேபாள பிரதமர் தனது நடவடிக்கைக்கு காரணம் கூறியிருந்தார். எனவே, இது ஆளும் கட்சிக்குள் நடக்கும் மோதல்களின் வெளிப்பாடு என தெளிவாகிறது. அவர் தனது எதிர்ப்பாளர்களுக்கு எதிராக தனது கட்சியின் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் அல்லது தனது கட்சி ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றொரு தலைவருக்கு இடமளித்திருக்க வேண்டும்.
கட்சியில் அவரது போட்டியாளர்களான புஷ்பா கமல் தஹால் 'பிரச்சந்தா' மற்றும் மாதவ் குமார் 'நேபாள்' ஆகியோர், அதிகாரப் பகிர்வுக்கான தனது உறுதிமொழியை மதிக்க மறுத்து, பல்வேறு அரசியலமைப்பு மற்றும் முக்கிய முடிவெடுக்கும் அமைப்புகளை கட்டுப்படுத்த தனது கைகளில் அதிகாரத்தை குவித்து, நிர்வாகத்தில் பரவலான ஊழலை ஊக்குவித்தது, ஆட்சி செய்ய திறமையற்றவர் என்பதைக் காட்டுகிறார் என்று ஒலி மீது குற்றம் சாட்டுகின்றனர்.
ஒலியின் இந்த நடவடிக்கை, அதிகாரத்திற்கான அவரது பதவி வேட்கையால் மேற்கொள்ளப்பட்டதால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டு அவசரநிலை கொண்டுவரப்படலாம் என்றும், அரசியலமைப்பு சிதைக்கப்பட்டு நாடு நீண்ட கால உறுதியற்ற தன்மைக்கு செல்லும் என்றும் நேபாளத்தில் பரவலாக ஊகங்கள் உள்ளன.
ஒலியின் நடவடிக்கை நேபாள அரசியலை மேலும் சிதைப்பதற்கும், புதிய அரசியல் சக்திகளுக்கும் அவற்றின் சீரமைப்புகளுக்கும் வழிவகுத்தது. ஒலி தனது கட்சிக்குள் கணிசமான சிறுபான்மை பலத்துடன் உள்ளதால், கட்சி அவரை வெளியேற்றி பிளவுபடத் தொடங்கியது. பல்வேறு மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலையில் இந்த பிளவு, அதிகரித்து வருகிறது. இருப்பினும் தேர்தல் ஆணையம் இதுவரை ‘உண்மையான’ கட்சி யார் என்று அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
பிரதான எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரசும் உள்நாட்டில் சிதறி உள்ளது. மேலும் அதிகரித்து வரும் குழப்பத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற குழப்பத்தில் உள்ளது. நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு வெளியேற்றப்பட்ட மன்னராட்சி மற்றும் இந்துத்துவ சித்தாந்தத்தின் தலைமையில் நிலப்பிரபுத்துவ சக்திகள் ஒரு இந்து அரசை உருவாக்க மீண்டும் ஒன்று திரண்டு வருகின்றன. பிளவுபட்ட மாதேசி குழுக்களும் தாங்கள் விரும்பும் அரசியல் திசையை மதிப்பிடுகின்றன.
அதிகார கட்டமைப்பின் மீது தனது சர்வாதிகார கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வது படிப்படியாக கடினமாகி வருவதால், ஒலி தனது கம்யூனிஸ்ட் கட்சி போட்டியாளர்களை சமாளிக்க நேபாளி காங்கிரஸின் பிரிவுகளுடனோ அல்லது இந்துத்துவா படையினருடனோ கூட்டணி வைத்துக் கொள்வது பற்றி யோசிப்பார். அவர் யாருடன் வெற்றி பெறுவார் என்பது யாருக்கும் தெரியாது. அவர் இயல்பாகவே பலவீனமாக இருக்கும் தனது போட்டியாளரான பிரச்சந்தா-நேபாள் அணியை பிரிக்க முயலக்கூடும்.
பிரச்சந்தா தலைமையிலான மாவோயிஸ்டுகள் மற்றும் நேபாள் மற்றும் கானல் தலைமையிலான ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டுகள், போன்றவர்கள் விரோதப் போக்கினை அடிமட்ட நிலை அளவிற்கு சென்ற வரலாற்றைக் கொண்டுள்ளனர். பிரச்சந்தாவின் அதிகார தேடலும் சீனாவின் ஆழ்ந்த வடிவமைப்பும் 2017-18ஆம் ஆண்டில் மாவோயிஸ்டுகள் மற்றும் UML குழுக்கள் ஒன்றிணைந்து நேபாளத்தின் ஒரே ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியாக நேபாளத்தில் ஒரு கம்யூனிஸ்ட் ஆட்சி உருவாகியது. இந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில், வரவிருக்கும் நாட்கள் மற்றும் மாதங்களில், சந்தர்ப்பவாத சமன்பாடுகள் மற்றும் இடையூறு விளைவிக்கும் பிரச்சினைகள் அதிகம் இருக்கலாம்.
இந்தியாவும் சீனாவும் அவர்களின் உத்தி மற்றும் பொருளாதார பங்குகளுடன், நேபாளத்தில் நடக்கும் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவும் சீனாவும் அவர்களின் நலன்களுக்கு சேவை செய்யும் நட்பு மற்றும் நம்பகமான ஒரு ஆட்சி மாற்றத்திற்கான தீவிர போட்டியில் இறங்கியுள்ளன. சீன ஒத்துழைப்புடன் ஆட்சியில் இருந்த ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இந்தியா மகிழ்ச்சியடைகிறது. ஆனால் இதன் மூலம் என்ன நடக்கும் என்பதில் ஒரு பெரிய கேள்விக்குறி தொங்குகிறது. இந்தியாவின் ஆளும் அமைப்புகளில் இந்துத்துவா மற்றும் மன்னராட்சி தலைமையிலான படைகளை ஊக்குவிக்க விரும்பும் பிரிவுகள் இருக்கலாம். அவர்களின் மதிப்பீட்டில், அது ‘கடவுள்-நம்பிக்கையில்லா’ கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்களுக்கு ஒரு சாத்தியமான எதிர்ப்பை வழங்கும்.
எனினும், இந்துத்துவ சித்தாந்தத்திற்கு அனுதாபம் காட்டிய நேபாள மன்னராட்சி, நேபாளத்திற்கு ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் வழங்காதது மட்டுமல்லாது, சீனா அல்லது பாகிஸ்தான் ஆகியவை அங்கு கால்பதிக்க மேற்கொண்ட உத்திகளை அங்கு தடுக்கவுமில்லை என்பதையும் நினைவு கூரவேண்டும்.
நேபாளத்தின் நிலையற்ற சூழ்நிலையில், கடந்த கால அரசியல் சூழ்ச்சிகளுக்கு நேபாளத்தில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட மற்றும் ஊக்குவிக்கப்பட்ட இந்திய விரோத தேசியவாதத்தின் அடிப்படையில் பெரும் விலை கொடுத்து வருவதால், தற்போது இந்தியா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நேபாள அரசியல் அமைப்புரீதியாக உறுதிப்படுத்தப்படும் வரை, நேபாளத்தின் குழப்பமான உள்நாட்டு அரசியலில் இருந்து விலகி இருப்பது விவேகமானதாக இருக்கும். அதுவரை காத்மாண்டுவை சமாளிக்க வேண்டும்.
அதிகரித்து வரும் நேபாள கொந்தளிப்பில் சீனர்கள் விளையாடுவதைக் கண்டு பீதியடையத் தேவையில்லை, அதற்காக விலையை அவர்கள் தருவார்கள்.